பயிற்சி 10   -   பொருளுணர்ந்து எழுதுதல் பயிற்சி                                                  

 

இசைக் கருவிகள்      

      

தமிழர்கள் ஆதிகாலம் தொடக்கம் தோல் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். முரசு, முழவு, தவில், பறை, மிருதங்கம் என்பன தமிழர்களின் தோல் இசைக் கருவிகளுள் சில.

இசை, பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வில் கலந்துவிட்ட ஒன்றாகும். இசையில் மயங்கிய தமிழர், திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம், மத்தளம், தவில் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பார்கள். தமிழ்த் திருமணங்களில் தவில் கச்சேரி இருக்கும். அதில் நாதஸ்ரவரத்துடன் தவில் இசை இடம்பெறும். இதுபோல் துன்ப நிகழ்ச்சிகளுக்கு தாரை, தப்பட்டை போன்ற இசைக் கருவிகள் உள்ளன.

தமிழர்களின் தோல் இசைக்கருவிகளுள் முரசு தனிச்சிறப்பு உடையது. அக்காலத்தில் வீரமுரசு கொட்டி மன்னர்கள் போருக்குப் புறப்படுவார்கள். முரசு கொட்டும் ஒலி கேட்டு வீரர்கள் போர்க்கோலம் கொள்வார்கள்.

செய்திகளை மக்களுக்கு அறிவிக்கவும் முரசு, பறை போன்ற இசைக் கருவிகள் பயன்பட்டன. பறை கொட்டும் ஒலி கேட்டு மக்கள் பொது இடங்களில் கூடுவார்கள். அவர்களுக்கு செய்தி அறிவிப்பவன் செய்தியைக் கூறுவான். இவ்வாறு தோல் இசைக் கருவிகள் தமிழர் வாழ்வில் ஒன்றாக இணைந்திருந்தன.



 

 

பயிற்சி 10

  

கீழே உள்ள கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும்.

 

 

1. திருமணங்களில் எந்த இசைக் கருவிகளை வாசிப்பார்கள்?

  

  

2. அக்காலத்தில் ஏன் பறை கொட்டினார்கள்?

 

 

3. அக்காலத்தில் முரசை எதற்குப் பயன்படுத்தினார்கள்?

  

  

4. தோல் இசைக்கருவிகளை ஆதிகாலத்திலிருந்து உபயோகித்த இனத்தின் பெயர் என்ன?

  

  

5. சோக நிகழ்ச்சிகளில் எந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தினார்கள்?

 

 

 

6. உங்களுக்குத் தெரிந்த ஏழு இசைக் கருவிகளின் பெயர்களை எழுதவும்.

  

  

7. அக்காலத்தில, பறை ஒலி கேட்டு மக்கள் என்ன செய்வார்கள்?

  

  

  

ஆக்கம்: அன்பு ஜெயா